கொழும்பில் நபரொருவரின் உயிரை பறித்த இராணுவ வாகனம்!
கொழும்பில் இராணுவ வாகனம் மோதியதில் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் மொரட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்து சம்பவத்தில் பாணந்துறை ஹொரேதுடுவ பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
விபத்துக்குள்ளான வாகனம் சைக்கிளில் பயணித்தவர் மீது மோதிய பின்னர் வீதியில் பயணித்த பெண்ணின் மீது மோதியிருந்தது.
பலத்த காயம் அடைந்த 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் வாகனத்தை ஓட்டிச் சென்ற இராணுவ சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.