இராணுவ சிப்பாய் பொலிஸ் கான்ஸ்டபிள் மோதல்!
கெக்கிராவ கும்புக்வெவ பிரதேசத்தில் இராணுவவீரர் ஒருவரை தாக்கி அவரது மனைவி மற்றும் மகனை காயப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபில் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் என கூறப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான இராணுவ சிப்பாய் மருத்துவ சிகிச்சைக்காக தம்புள்ளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இராணுவ சிற்பாயும், பொலிஸ் கான்ஸ்டபிலும் அயலவர்கள் என்பதுடன் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் தாக்குதலை தடுக்க முற்பட்ட இராணுவ சிற்பாயின் மகனுக்கும் மனைவிக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.