கிளிநொச்சியில் இராணுவம் - விசேட அதிரடிப்படை அதிரடி! மர்ம பொருளுடன் சிக்கிய நபர்
கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரும் இணைத்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது 5 கிலோக்கு அதிக எடையுள்ள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்றைய தினம் (17-10-2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணேசபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் மறைத்து எடுத்து செல்லப்பட்ட கஞ்சாவுடன் பயன்பாடு அற்ற காணிக்குள் சந்தேக நபர் சென்றுள்ளார்.
குறித்த மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்ற விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் சோதனையிட்டனர்.
இதன்போது, மறைத்து வைக்கப்பட்ட கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபரும், அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கஞ்சா பொதிகளும் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒட்டடைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.