லண்டனில் உள்ள வீதியில் திடீரென குவிந்த ஆயுதமேந்திய பொலிஸார்!
லண்டனில் உள்ள வீதி ஒன்றில் கத்தியுடன் மர்ம நபர் ஒருவர் வலம் வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில் குறித்த பகுதியில் ஆயுதமேந்திய பொலிஸ் அதிகாரிகள் குவிந்தனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் ஒக்ஸ்போர்டு வீதியில் உள்ள கடை ஒன்றில், கத்தியுடன் மர்ம நபர் சுற்றி வருவதாக பொலிஸாருக்கு, இன்று பிற்பகல் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, அங்கிருக்கும் Marks & Spencer- கடையில் இருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அதன் பின் ஆயுதமேந்திய பொலிஸார் அங்கு வந்து சோதனை செய்த போது, எந்த ஒரு நபரும் சிக்கவில்லை.

இந்நிலையில் மீண்டும் குறித்த பகுதியில், கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
இதேவேளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவே குறித்த கடையில் (Marks & Spencer) இருந்த வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டதாகவும், அதன் பின் கடை வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியில் இருந்த நபர் கூறுகையில்,
குறித்த கடையில் (Marks & Spencer) முன்பு கத்தியுடன் சண்டை நடந்த பின்னரே ஆயுதமேந்திய பொலிஸார் இங்கு விரைந்தாகவும், மேலும் இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.