எனது மக்களுக்காக நான் சாகும் வரை அரசியல் செய்வேன் ; நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவின் அதிரடி பேச்சு
கிளிநொச்சி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை தொடர்பாக தாம் எழுப்பிய கேள்விகளும் கருத்துக்களும் குற்றமாகக் கருதப்படுமானால், அதற்காக வழங்கப்படும் செருப்புமாலையையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் மக்களின் தேவைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக தெரிவித்த அவர், மக்களின் நலனுக்காக பேசுவது தவறாகக் கருதப்படக் கூடாது என்றார்.
அதேவேளை, தையிட்டி விகாரை தொடர்பான காணி விவகாரம் குறித்தும் கருத்து வெளியிட்ட அவர், அந்தப் பகுதியின் நிலைமைகள் தொடர்பாக உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், வடக்கு மக்களின் உரிமைகள் மற்றும் பிரச்சினைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பேன் என தெரிவித்த அர்ச்சுனா ராமநாதன், “எனது மக்களுக்காக நான் சாகும் வரை அரசியல் செய்வேன்” எனவும் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பிலான முழுமையான காணொளியை இங்கு காணலாம்....