அரியநேத்திரனின் ஜனாதிபதி தேர்தல் செலவு விபரம் தொடர்பில் வெளியான தகவல்!
நடந்து முடிந்த 9 அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவு விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனின் செலவு விபரம் காட்சிப்படுத்தப்படவில்லையென தெரியவந்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 35 வேட்பாளர்களின் செலவு விபரம் சகல மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
காட்சிப்படுத்தல் மேற்கொண்டுள்ள 35 வேட்பாளர்களின் கணக்கு விபரத்தில் சங்குச் சின்னத்தில் போட்டியிட்ட பா.அரியநேத்திரனின் கணக்கு அறிக்கை எங்குமே காட்சிப்படுத்தப்படவில்லை.
இது குறித்து தேர்தல்கள் அலுவலகத்தினரிடம் தொடர்பு கொண்டு வினவியபோது,
"அரியநேத்திரன் உரிய காலப் பகுதயில் தனது கணக்கு அறிக்கையை உரிய முறையில் கையளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உட்பட்டு சட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்படுவதால் அவரது அறிக்கை காட்சிப்படுத்தப்படவில்லை." - என்று தேர்தல் அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.