பெரும் அச்சத்தில் சாணக்கியன்; வைரலாகும் ஓடியோ!
முன்னாள் நாடாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் - சாணக்கியன் , அரியநேத்திரனின் பிரச்சார உத்திகண்டு பெரும் அச்சத்தில் உள்ளதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக தமிழரசு கட்சியின் யாழ் மாவட்டத்தில் போட்டியிரும் ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் வழங்கிய உத்தரவுக்கு அமையவே சாணக்கியன் அச்சமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சிங்கள கட்சிகளுக்குள் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்
அரியநேந்திரன் அவர்களுக்கான செல்வாக்கு குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமானதாக காணப்படுகின்றது.
அதேவேளை கடந்த 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் அதிகளவான சவால்களுக்கு மத்தியிலும் பெரும் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அரியநேந்திரன் மூன்று ஆசனங்களைப் பெற்றிருந்தார்.
அதோடு அரியநேந்திரன் தமிழ்தேசியத்துடன், தமிழ் மக்களுடனும் இணைந்து பயணிக்க கூடியவர். இந்நிலையில் இவ்வாறான ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிபெறவேண்டியவர்களில் , 2, 6, 8 ஆம் இலக்கத்தை வெற்றிபெறாத வகையில் திட்டங்களை வகுக்குமாறு உத்தரவு வந்துள்ளதாகவும் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கியஸ்தர் ஒருவரால் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாற நிலையில் ஓடியோவும் வெளியாகியுள்ளது. அரியநேந்திரன் , யோகேஸ்வரன் போன்றவர்கள் தமிழரசு கட்சியின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சாணக்கியனால் இந்த ஓடிட்யோ வெளியிடப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அதிருப்தியையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை மஹிந்த ராஜபக்சவின் கட்சி அமைப்பாளராக இருந்தவர்தார் சாணக்கியன். இந்நிலையில் சிங்கள கட்சிகளுக்குள் இருந்த சாணக்கியன் 2018 ஆண்டிலேயே சுமந்திரன் மற்றும் சம்பந்தர் ஆகியோரால் இலங்கை தமிழரசுகட்சிக்குள் இறக்குமதி செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.