ஒரேயடியாக உட்கார்ந்து வேலை பார்ப்பது உடலுக்கு ஆபத்து! என்னவெல்லாம் ஆகும் தெரியுமா?
ஒரு நாளுக்கு 30 நிமிடங்கள் உடற்பயிற்சி மட்டும் செய்து மற்ற நேரத்தைக் கணினியிலும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்தும் கழிப்பவரா நீங்கள்? ஒருவேளை இவ்விரு கேள்விகளுக்கும் உங்களது பதில் 'ஆம்' என்றால், இந்தப் பதிவு உங்களுக்கானது.
அதாவது என்னதான் நீங்கள் உடற்பயிற்சி செய்தாலும், நாள் முழுக்க உடலளவில் சுறுசுறுப்பாக இல்லையென்றால் மிக எளிதில் நோய்கள் தொற்றிக்கொள்ளும் என ஓர் ஆய்வு கூறுகிறது.
ஃபின்லந்தில் (Finland) நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 3,700க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் அரை மணி நேரத்திற்குக் கடுமையாக உடற்பயிற்சி செய்துவிட்டு, அதன் பிறகு 10, 11 அல்லது 12 மணி நேரம்கூட உட்கார்ந்தே அன்றைய நாளை கழிக்கின்றனர்.
ஏற்படும் விளைவுகள்
சர்க்கரை , கொழுப்பு கூடும்
இதனால் அவர்களது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடி, உடலில் உள்ள கொழுப்பும் அதிகரிப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
ஆரோக்கியம் பாதிக்கும்
ஆனால், அவ்வப்போது எழுந்து நடந்து, உடலைக் கொஞ்சம் அசைத்துக்கொள்வோரின் ஆரோக்கியம் சிறப்பாய் இருப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது.
உடற்பயிற்சி செய்துவிட்டு, அன்றைய தினம் முழுக்க உட்கார்ந்தே இருப்பது, அறவே உடற்பயிற்சி செய்யாததற்குச் சமம் என ஆய்வு கூறுகிறது.
எனவே வேலைசெய்தாலும் அவ்வப்போது எழுந்து நடந்து சென்றுவந்தால் உடல் ரோக்கியத்தை பேண முடிவும்.