குடைமிளகாய் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?
உணவிற்கு சுவையையும், நிறத்தையும், ஊட்டச்சத்தையும் சேர்க்கும் காய்கறிகளில் குடைமிளகாய் முக்கிய இடத்தைப் பெறுகிறது. காரம் குறைவாக இருந்தாலும், இதில் உடலுக்குத் தேவையான பல்வேறு விட்டமின்கள் மற்றும் கல்சியம், பொஸ்பரசு போன்ற முக்கிய ஊட்டசத்துகள் நிறைந்துள்ளன.
அந்த வகையில் குடைமிளகாயை உணவுடன் சேர்த்துக்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.

மலச்சிக்கல் பிரச்சினைக்கு உதவும்
குறிப்பாக விட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதுடன், விட்டமின் A கண் பார்வை மற்றும் தோல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பணியைச் செய்கிறது. அதிக நார்ச்சத்து கொண்ட குடைமிளகாய், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சினையைத் தணிக்க உதவுகிறது. மேலும், வயிற்றுப்புண் மற்றும் வாய்வு போன்ற செரிமானக் கோளாறுகளின் தாக்கத்தைக் குறைக்கவும் இது பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.
புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும்
குடைமிளகாயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகின்றன. சிறுநீர்ப்பை, கணையம், கருப்பைவாய், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்
இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. குறைந்த கலோரி மற்றும் கொழுப்பு கொண்டதால், உடல் எடை அதிகரிப்பதையும் தேவையற்ற கொலஸ்ட்ரால் சேர்வதையும் தடுக்கிறது.
இளமையான தோற்றத்தை பராமரிக்கும்
மேலும், இதில் உள்ள வைட்டமின் C மற்றும் வைட்டமின் E தோலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சுருக்கங்களை குறைத்து இளமையான தோற்றத்தை பராமரிக்க உதவுகின்றன. செல்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, தோலுக்கு உறுதியையும் பொலிவையும் அளிக்கிறது.