ஏலியன்கள் உண்மையா ; விண்வெளி ஆராய்ச்சியில் புதிய அத்தியாயம்
ஏலியன்கள் இருக்கிறதா? இல்லையா? என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இப்படி இருக்கையில், பூமியிலிருந்து சுமார் 124 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தில் ஏலியன்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
சரி அந்த ஏலியன்கள் நம்மை போலவே டெக்னாலஜியை பயன்படுத்துகிறதா? என கண்டறிய அந்த கிரகத்திலிருந்து ரேடியோ சிக்னல் வருகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
K2-18b என பெயரிடப்பட்ட கோளில், ஹைட்ரஜன் அதிகம் இருப்பதாகவும் நம் உலகத்தில் இருப்பதை போல கடல்கள் அங்கு இருப்பதாகவும் கண்டறியப்பட்டது.

குறிப்பாக டைமெத்தில் சல்பைடு இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. டைமெத்தில் சல்பைடு என்பது உயிர்கள் இருந்தால் மட்டுமே உருவாகும்.
எனவே K2-18b கிரகத்தில் டைமெத்தில் சல்பைடு கண்டுபிடிக்கப்பட்ட உடன், அங்கு உயிர்கள் இருப்பதற்கான முதற்கட்ட ஆதாரம் நமக்கு கிடைத்தது.
இந்த கோள், பூமியை போலவே அதன் சூரியனுக்கு போதுமான தூரத்தில்தான் சுற்றி வருகிறது. எனவே, நிச்சயம் அங்கு உயிர்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டது.
பிரச்சனை என்னவெனில், அங்கு எந்த மாதிரியான உயிர்கள் இருக்கின்றன என்பது நமக்கு தெரியாது. அங்கு வாழும் ஏலியன்கள் டெக்னாலஜியில் மேம்பட்டவையாக இருந்தால் நம்முடைய கதை காலி. எனவே இதை தெரிந்துக்கொள்ள, கார்ல் ஜி. ஜான்ஸ்கி வெரி லார்ஜ் அர்ரே மற்றும் மீர்காட் ஆகிய 2 பெரிய ரேடியோ ஆய்வகங்களைப் பயன்படுத்தி அந்த கோளிலிருந்து சிக்னல் வருகிறதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வை மான்செஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் பெர்க்லி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் தலைமையிலான குழு நடத்தியது.
நாசா தனது ஜேம்ஸ் வெப் தொலை நோக்கியை இந்த ஆய்வு பயன்படுத்த அனுமதித்தது. எனவே இந்த கோள் தொடர்பான ஆராய்ச்சி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.