நான் தமிழன் சபையில் உரத்துக் கூறிய நாடாளுமன்றத்தை அதிர வைத்த அர்ச்சுனா எம்.பி
யாழ்ப்பாணத்தில் உள்ள தையிட்டி விகாரை இனம் சம்பந்தமானது அதனை இடிக்கக்கூடாது என்று கூறிய ஒரே தமிழன் நான் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வைத்து தையிட்டி விகாரையை இடித்தழிக்குமாறு எனது பக்கத்தில் இருந்தவர்கள் கூறியபோது அதனை நான் எதிர்த்தவன்.
நான் இனவாதி அல்ல எனவும் தெரிவித்துள்ளார். எனது தந்தை காலில் அடிப்பட்டு வயிற்றில் காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் காணமல் போயுள்ளார்.
இவரை போன்றே எத்தனையோ பேர் காணமல் ஆக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றில் அர்ச்சுனா எம். பி உரத்து கூறியுள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் அர்ச்சுனா எம். பி நாடாளுமன்றத்தில் கூறிய விடயங்களை இக்காணொளி மூலம் காணலாம்