சபையில் அனுர அரசாங்கத்தை புகழ்ந்த அர்ச்சுனா எம்.பி
தேசிய மக்கள் சக்தி இனவாதக் கட்சியல்ல என்றும், அதனால்தான் வடக்கிலுள்ள பொய் தமிழ் அரசியல்வாதிகளை மக்கள் தோற்கடித்து தேசிய மக்கள் சக்திக்கு 3 ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளனர் என்றும், யாழ் மாவட்ட எம்.பி. யான இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
யார் இனவாதிகள் என்பது தொடர்பில் கடும் சர்ச்சை
நாடாளுமன்றத்தில் நேற்று முன் தினம் (04) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான தயாசிறி ஜெயசேகரவுக்கும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்காவுக்குமிடையில் யார் இனவாதிகள் என்பது தொடர்பில் கடும் சர்ச்சை ஏற்பட்டது.
இந் நிலையியில் திடீரென எழுந்த அர்ச்சுனா எம்.பி , தனது கருத்தை முன்வைக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவ்ர் மேலும் கூறுகையில்,
கடந்த அனைத்து அரசுகளிடமும் இனவாதம் இருந்தது. தமிழர்களான எம்மை பிரித்தே பார்த்தார்கள். இனவாத ஆட்சியைத்தான் செய்தார்கள்.ஆனால் தற்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசிடம் இனவாதம் இல்லை.
அதனால்தான் வடக்கு மக்கள் பொய் பேசும் தமிழ் அரசியல்வாதிகளை தோற்கடித்து தேசிய மக்கள் சக்திக்கு 3 ஆசனங்களை பெற்றுக்கொடுத்தார்கள்.
அத்துடன் சுயேட்சைக்குழுவான் என்னையும் வெற்றி பெற வைத்தார்கள். அதேவேளை எதிர்க்கட்சிகள் தான் இப்போது இனவாதத்தை முன்னெடுப்பதாக சாடிய, அர்ச்சுனா எம்.பி . தேசிய மக்கள் சக்தி இனவாதத்தை முன்னெடுக்கவில்லை என்றும் கூறினார்.