நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் உடனடியாக அவர் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
காணி தகராறு ஒன்றில் பெண் ஒருவரை துப்பாக்கியை கட்டி மிரட்டியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணிப் பிரச்சினை ஒன்றில் பெண் ஒருவரை துப்பாக்கி முனையில், கொலை செய்யப்போவதாகவும், தலையில் துப்பாக்கியால் சுடுவதாகவும் அச்சுறுத்திய சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.
குறித்த காணொளி வெளியாகி சர்ச்சையாகிய நிலையில் இன்றையதினம் வாக்குமூலம் வழங்குவதற்காக இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் பொலிஸாரால் அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
இதன்போது அவரது கைத் துப்பாக்கியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. அதன்பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார், அவரை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.