மட்டக்களப்பில் திடீரென முளைக்கும் தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் பலகைகள்; தொடரும் குழப்பம்
மட்டக்களப்பு - வெல்லாவெளி பகுதியில் கண்ணபுரம் தொல்லியல் இடம் என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகை நாட்டப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை உருவானது.
தொல்பொருள் எனும் போர்வையில் நேற்றைய தினம் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறு பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்ட நிலையில் இன்று வெல்லாவெளியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெயர்ப்பலகை
இச் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த அப் பகுதி அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பெயர்ப்பலகையை நாட்ட விடாமல் தடுத்துள்ளனர்.
இந்நிலையில் படுவான்கரைப் பெருநிலம், மண்முனை தென்மேற்கு பிரதேச பிரிவில் உள்ள தாந்தாமலை முருகன் ஆலயத்தில் செல்லும் வீதிகளில் இரு இடங்களில் நேற்று தொல்பொருள் திணைக்களத்தால் அறிவித்தல் பலகை இடப்பட்டன.
இந்நிலையில் சித்தாண்டி பகுதியில் பெயர்ப்பலகை நாட்டப்பட்ட இடத்தில் ஒரு பழைமையான சிவன் கோவில் ஒன்றும் சில வரலாற்று தடயங்களும் காணப்படுகின்றன.

அங்கு தொல்லியல் திணைக்களத்தினால் சில நடுகை கற்கள் நடுகையிடப்பட்டுள்ளன. அந்த சிவன் கோவிலுக்கும் அந்த இடத்திற்கும் செல்வதற்கு தடை காணப்படுவதாகவும் அவ் ஆலயத்திலே வழிபட முடியாத சூழ்நிலை காணப்படுவதாகவும் மீறி செயற்படுபவர்கள் கைது செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இவ் இடத்திற்கு இனவாதியான அம்பிட்டிய சுமணரத்ன தேரர் உட்பட மூன்று பிக்குகள் மற்றும் இராணுவம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் வருவதாகவும் ககுறிப்பிடப்படுகின்றது.