வட்டுக்கோட்டை பயங்கர விபத்து : இருவருக்கு நேர்ந்த விபரீதம்
வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் வட்டுக்கோட்டை அராலி பகுதியில் இன்று மாலை (31-12-2021) இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து குறித்து தெரியவருவது, அராலி தோப்பச்சி வாசிகசாலைக்கு அருகே சென்றுகொண்டிருந்த பாண் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டியும் சைக்கிளும் விபத்துக்குள்ளானது.
இவ்விபத்து சம்பவத்தில் இதில் முச்சக்கர வண்டியின் சாரதியும் சைக்கிளில் பயணித்த நபரும் படுகாயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.