வரலாற்று சாதனை படைத்த Apple நிறுவனம் ; தொடரும் வெற்றிப்பயணம்
iPhone
Apple
Microsoft
Technology
By Sahana
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Apple, தனது சந்தை மதிப்பை $4 ட்ரில்லியன் வரை உயர்த்தி, வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.
இதன்படி $4 ட்ரில்லியன் சந்தை மதிப்பை எட்டிய மூன்றாவது நிறுவனமாக Apple நிறுவனம் பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர் Nvidia மற்றும் Microsoft ஆகிய நிறுவனங்கள் இந்தச் சாதனையை அடைந்தன.
iPhone 17 இன் வலுவான விற்பனையால் Appleஇன் பங்குகள் இன்று 0.1% அதிகரித்து இந்தச் சாதனையை அடைந்தன.
Apple நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் $1 ட்ரில்லியன் மதிப்பையும், 2020 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் $2 ட்ரில்லியன் மதிப்பையும், 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் $3 ட்ரில்லியன் மதிப்பையும் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US