சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றம்!
ஹட்டனில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக சுமார் 2000 பொதுமக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பொதுமக்கள் , ஹட்டன் கொழும்பு பிரதான வீதியை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக மறித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த (09) முதல் தமக்கு மண்ணெண்ணெய் கையிருப்பு கிடைக்கவில்லை எனவும், தினமும் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்து வெறுங்கையுடன் வீடு திரும்புவதாகவும் ஹட்டன் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த போராட்டம் காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்தை மாற்றுவதற்கு ஹட்டன் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.