கால்வாயில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்! பரபரப்பு சம்பவம்
அனுராதபுரத்தில் உள்ள ஹால்பானு கால்வாயில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் உயிரிழந்து சுமார் ஐந்து நாட்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெண்ணின் சடலம் உருக்குலைந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
ஹால்பானு கால்வாய் பகுதியில் விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர், குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியில் தேடிய போது சடலத்தை அவதானித்துள்ளார்.
பின்னர் விவசாயி இது தொடர்பில் அநுராதபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.