அனுராதபுரம் வைத்தியசாலையில் பாரிய சத்தத்துடன் வெடித்த எரிவாயு!
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரதான சமையல் அறையில் பயன்படுத்தப்படும் எரிவாயு ரைஸ் குக்கரில் ஒரு பகுதி வெடித்து தீப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இன்று (19-12-2021) மதியம் நடைபெற்றுள்ளது.
மேலும், குறித்த எரிவாயு ரைஸ் குக்கருக்கு மூன்று எரிவாயு கொள்கலன்களில் இருந்து எரிவாயு விநியோகிக்கப்படுவதுடன் ஒரு தடைவையில் 25 கிலோ கிராம் அரிசியை சமைக்க முடியும் என கூறப்படுகிறது.
இன்று (19-12-2021) மதியம் பாரிய சத்ததுடன் வெடித்த எரிவாயுவை செல்லும் பகுதி மற்றும் எரிவாயு வெளியேறும் இடத்தில் தீப்பிடித்துள்ளது.
இதையடுத்து ஊழியர்கள் எரிவாயு விநியோகத்தை துண்டித்துள்ளனர். இதனால், மிகப் பெரிய ஆபத்து நிகழாமல் தடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எரிவாயு ஒளவன் தீப்பிடித்தமை சம்பந்தமாக அனுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.