கோட்டாபய வென்ற 16 மாவட்டங்களில் 15 யில் அநுர குமார முன்னிலை!
இலங்கையில் நடந்து முடிந்த 9 அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று எண்ணின் முடிவில் 22 தேர்தல் மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் அநுர குமார திசாநாயக்க முன்னிலை வகிக்கின்றார்.
இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், புத்தளம், கம்பஹா, கேகாலை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பத்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய 15 மாவட்டங்களில் அநுர குமார திசாநாயக்க முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை வகித்த 16 மாவட்டங்களில் ஒன்றைத் தவிர 15 மாவட்டங்களிலும் அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.