2024 ஜனாதிபதி தேர்தலில் நிராரிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் வாக்குகள்!
இலங்கையில் நடந்து முடிந்த 2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தற்போது மும்முரமாக வெளியாகி கொண்டிருக்கின்றது.
இவ்வாறானவொரு நிலையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது ஒன்றரை லட்சம் வாக்குகள் நிராரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்முறை தேர்தலில் வரலாற்றில் அதிகூடிய வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதன் காரணமாக எந்தவொரு வேட்பாளரும் 50 வீதம் வாக்குகளைப் பெற முடியாது என்றொரு வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது.
அதன் காரணமாக 2வது மற்றும் 3வது விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.
இருப்பினும் அவ்வாறு இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகளை அளிப்பதற்கான சரியான முறை குறித்த தெளிவு உரிய முறையில் வழங்கப்படாத காரணத்தினால் 2வது மற்றும் 3வது விருப்பு வாக்குகள் அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் பெருமளவில் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.