தென்னிலங்கை அரசியலில் இன்று பரபரப்பை ஏற்படுத்தவுள்ள அனுர! கலக்கத்தில் பலர்
நாட்டில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பான பல ஆவணங்களை இன்று வெளியிடுவேன் என்று ஏற்கனவே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க அறிவித்திருந்தார்.
அந்தவகையில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஊழல் தொடர்பான இரகசிய ஆவணங்கள் வெளியீடு தற்போது இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெறுகின்றது.
நாட்டின் பலம் வாய்ந்த அரசியல்வாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் அடங்கிய பெரும் எண்ணிக்கையான கோப்புகளை ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று நாட்டுக்கு வெளிப்படுத்தவுள்ளார்.
இந்நிகழ்வில் அநுரகுமார திஸாநாயக்க, அரசியல் பீட உறுப்பினர்கள், முன்னாள் கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி, ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் வசந்த சமரசிங்க மற்றும் சட்டத்தரணிகள் பலரும் கலந்துகொள்கின்றனர்.
இதனை சுட்டிக்காட்டும் வகையில் ஜே.வி.பி தலைவர் மற்றும் கட்சி உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்குகளில் 'நாட்டை அழித்த திருடர்கள் மொத்தமாக அம்பலம்' என்ற தலைப்பின கீழ் பதிவு ஒன்று பதிவிடப்பட்டிருந்தது.
அதன்படி, நாட்டின் பொதுச்சொத்துக்களை பாரியளவில் கொள்ளையடித்த அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பல மோசடிகள், ஊழல்கள் இன்று அம்பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்டுகிறது.