இந்திய பிரதமர் மோடியிடம் ஜனாதிபதி அநுர விடுத்துள்ள வேண்டுகோள்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் (16-12-2024) பிற்பகல் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஹைதராபாத் மாளிகையில் நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பகல்போசன விருந்து வழங்கினார்.
இதேபோதே இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்திருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.