பிக்பாஸ் சீசன் 6இல் குதித்த யாழ் பெண்; உலக தமிழர்களிடம் விடுத்த கோரிக்கை!
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியாது இன்றைய தினம் 6.30 மணிக்கு மிகவும் பிரமாண்டமாக ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு இலங்கையைச் சேர்ந்த ஜனனி என்பவரும் கலந்து கொண்டுள்ளார்.
இதனால் இலங்கை மக்கள் அனைவரும் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இவரது முழுப்பெயர் ஜனனி குணசீலன். இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் மாடலிங் துறையில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்கின்றார்.
இதனால் சில விளம்பரங்களில் கூட நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல முதல் ஓர் வீடியோ ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.
அதில் அவர் கூறியதாவது,
அனைவருக்கும் வணக்கம் நான் பிக்பாஸ் ஷோவுக்குள்ள போகப்போறன். நான் உலகத் தமிழர்கள் அனைவரும் எனக்கு சர்ப்போட் பண்ணுங்க. நான் உலகத்தில இருக்கிற அனைத்து தமிழர்களை நம்பித்தான் இந்த ஷோவுக்குள்ள போறன்.
நான் கொஞ்சம் சின்ன பிள்ளை ஏதாவது தப்பு பண்ணினால் மன்னிச்சுக் கொள்ளுங்க. முடிந்தவரை உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருப்பேன் என்றும் தெரிவித்து ஓர் வீடியோவை பதிவு செய்துள்ளார்.