இஷாரா செவ்வந்தி விசாரணையில் அம்பலமான மற்றொரு இரகசியம்
இஷாரா செவ்வந்தி தற்போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் பல திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்தி வருகிறார்.
கமாண்டோ சலிந்த என்பவர் கமாண்டோ இராணுவ முகாம்களில் உள்ள வீரர்களை துப்பாக்கித்தாரிகளாக பயன்படுத்தியுள்ளமை தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கமாண்டோ சலிந்த, கமாண்டோ இராணுவ முகாம்களில் பொருளாதார கஷ்டங்களில் வாழும் வீரர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களை வட்சப் குழுவொன்றின் மூலம் தொடர்பை ஏற்படுத்தி, துப்பாக்கிதாரிகளாக பயன்படுத்தியுள்ளார்.
இவ்வாறு பயன்படுத்தப்பட்ட ஒருவரே கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கித்தாரியாக செயற்பட்டுள்ளார்.
கெஹெல்பத்தர பத்மேவின் கட்டளைக்கிணங்க, செவ்வந்தி, கமாண்டோ சமிந்துவை கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு பயன்படுத்தியுள்ளார்.
இஷாரா செவ்வந்தி, கமாண்டோ சமிந்துவுடன் மிகவும் நெருக்கமாக பழகி தனது திட்டங்களுக்குள் சிக்க வைத்துள்ளார்.
இதேவேளை, கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு இஷாரா செவ்வந்தி பணம் வாங்கவில்லை எனவும் கெஹெல்பத்தர பத்மேவின் கைதின் பின்னர் செவ்வந்தி பொருளாதார கஷ்டங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பொருளாதார சிக்கல்களால் இஷாரா செவ்வந்தி தனது காதணியை அடகு வைத்துள்ளதாகவும் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.