தேவாவின் குடும்பத்தில் மற்றுமொருவர் காலமானார்
பிரபல திரைப்பட இசையமைப்பாளர் தேவா அண்மையில் காலமானதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தில் மேலும் ஒரு பெரும் துயரமாக, தேவாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான சபேஷின் மகனும் நடிகருமான கார்த்திக் சபேஷ் (வயது 37) மாரடைப்பு காரணமாகக் காலமானார்.
தமிழ் திரையுலகில் 'காதலில் விழுந்தேன்', 'வேட்டைக்காரன்' உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் கார்த்திக் சபேஷ்.

இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளி கூட்டணியில் சபேஷின் மகனான இவர், திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது.
முன்னணி இசையமைப்பாளர் தேவா மறைந்த சில நாட்களிலேயே, அவரது தம்பியின் மகனும் இளம் நடிகருமான கார்த்திக் சபேஷும் உயிரிழந்திருப்பது தேவா குடும்பத்தினரையும் தமிழ் திரையுலகினரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மறைந்த கார்த்திக் சபேஷின் மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.