ரிதன்யா சம்பவம் அடங்குவதற்குள் மற்றுமொரு சம்பவம் ; அதிர்ச்சியில் குடும்பத்தினர்

Tamil nadu Marriage Kanyakumari Death
By Sulokshi Jul 05, 2025 09:20 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 திருமணமான 6 மாதத்தில் இளம் பெண் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு கிழக்கு தாறாவிளையை சேர்ந்தவர் ராபின்சன். இவருடைய மகள் ஜெமலா (வயது 26), பி.எஸ்சி. நர்சிங் முடித்துள்ளார்.

ரிதன்யா சம்பவம் அடங்குவதற்குள் மற்றுமொரு சம்பவம் ; அதிர்ச்சியில் குடும்பத்தினர் | Another Incident Following Rithanya S Suicide

கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி திருமணம்

இவரும் இனயம் சின்னத்துறையை சேர்ந்த மரிய டேவிட் மகன் நிதின் ராஜ் (26) என்பவரும் காதலித்து வந்தனர்.

பிரபல அரசியல்வாதி ஒருவரின் சகோதரர் விசித்திர மோசடி ; விழி பிதுங்கும் வர்த்தகர்கள்

பிரபல அரசியல்வாதி ஒருவரின் சகோதரர் விசித்திர மோசடி ; விழி பிதுங்கும் வர்த்தகர்கள்

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் ஜெமலாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், காதல் ஜோடி திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தனர்.

ரிதன்யா சம்பவம் அடங்குவதற்குள் மற்றுமொரு சம்பவம் ; அதிர்ச்சியில் குடும்பத்தினர் | Another Incident Following Rithanya S Suicide

இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி திருமணம் நடந்தது. தொடர்ந்து பெண் வீட்டார் சார்பில் மேல்மிடாலம் கூண்டுவாஞ்சேரியில் புதிய வீடு கட்டி கொடுத்தனர்.

அந்த வீட்டில் ஜெமலாவும், நிதின் ராஜும் குடும்பம் நடத்தி வந்தனர். நிதின் ராஜ் பி.இ. படித்திருந்த நிலையில் சரியான வேலை இல்லாமல் இருந்தார். மேலும் வெளிநாடு செல்வதாக கூறி வந்ததனால் கணவன்-மனைவி இடையே  குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

கணவன்-மனைவி தகராறு

இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் ஜெமலாவின் பெற்றோருக்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவருடைய உடல் கருங்கலில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நிதின்ராஜின் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.

ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு தொழில்நுட்ப உபகரணங்கள் நன்கொடை

ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு தொழில்நுட்ப உபகரணங்கள் நன்கொடை

இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஜெமலாவின் தாயார் புஷ்பலதா கருங்கல் பொலிஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாடு அளித்துள்ளார்.

Tirupur Rithanya

குறித்த முறைப்பாட்டில் 'மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக' கூறியுள்ளார். அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் ஜெமலாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

அதிஉயர் பாதுகாப்பு சிறையிலிருந்த மரண தண்டனை கைதி மரணம்

அதிஉயர் பாதுகாப்பு சிறையிலிருந்த மரண தண்டனை கைதி மரணம்

அதேவேளை திருப்பூரில் திருமணமான மூன்றே மாதத்தில் , ரிதன்யா காருக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

Kopay North, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US