இலங்கைக்கு வந்தடைந்த மற்றுமொரு எரிபொருள் கப்பல்
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் நோக்கில், இன்று (16) காலை 10 மணியளவில் மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தற்போது வந்துள்ள கப்பலில் 18,000 மெட்ரிக் தொன் டீசல், 17,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 3,000 மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் அடங்கியுள்ளன.

மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர், இன்று முதல் எரிபொருளைத் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து பெறப்பட்ட 1,300-க்கும் மேற்பட்ட கொள்வனவுக் கட்டளைகளுக்கு ஏற்ப விநியோக நடவடிக்கைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
பயணிகள் பேருந்துகளின் சேவையை உறுதிப்படுத்துவதற்காக, இன்று அதிகாலை முதலே இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போக்களுக்குத் தேவையான எரிபொருள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.