நாட்டில் இன்னுமொரு தாக்குதல் நடத்தப்படலாம்; தேரர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
நாட்டில் எந்தவொரு நேரத்திலும் மீண்டுமொரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் இன்றும் இருப்பதாக பரபரப்பு தகவலொன்றை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கூறியுள்ளார்.
இந்த தகவலை ஊடகமொன்றுடன் நடத்தப்பட்ட நேர்காணலில் அவர் வெளியிட்டிருக்கின்றார். “அடிப்படைவாத சிந்தனைக் கொண்ட இளைஞர்கள் பலரும் நாட்டினுள் இருக்கின்றனர்.
நியூஸிலாந்தில் அண்மையில் காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர் தாக்குதல்நடத்தியதைப் போல இலங்கையிலும் நடத்தப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் இன்னும் அடிப்படைவாத நபர்கள் இருக்கின்றதாகவும் , அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்ற முழு விபரத்தையும் ஜனாதிபதியிடம் தெரிவித்திருப்பதாகவும் ஞானசார தேரர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.