எரிபொருள் விலையில் மாற்றம் வருமா? ; இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு
மாதாந்திர எரிபொருள் விலைத் திருத்தம் இன்று (31) மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் விலைகள் மீளாய்வு செய்யப்பட்டு புதிய விலைகள் அறிவிக்கப்படுவது வழக்கமாகும்.

அதன்படி, இன்று உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைகள் உள்ளிட்ட காரணிகளை ஆய்வு செய்த பின்னர், நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் புதிய விலைகள் தொடர்பான இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று காலை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு பதிவாகியுள்ளது.
அதன்படி, ஒரு பீப்பாய் (Barrel) பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 89.69 அமெரிக்க டொலர்களாகவும், ஒரு பீப்பாய் WTI கச்சா எண்ணெயின் விலை 84.50 அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், உள்நாட்டு எரிபொருள் விலைத் திருத்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.