பாடசாலை கல்விப்பணிப்பாளர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
கல்வி அமைச்சு மற்றும் மாகாண, மாவட்ட, வலய கல்விப்பணிப்பாளர்களுக்கு அல்லது அவர்களின் கீழ் பணியாற்றும் எவருக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டமூலத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளை மீறுவதற்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை என சுகாதார வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனவே தேசிய ரீதியில் அரசாங்கம் பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கும் வரை மாணவர்களை நேரடியாக பாடசாலைகளுக்கு வரவழைப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு எந்தவொரு பாடசாலையிலாவது நடைபெறுமானால் அதற்கு காரணமான அதிபர், ஆசிரியர் மற்றும் பங்குகொள்ளும் சகல மாணவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நோய்பரவலை ஏற்படுத்தியதாக குறித்த அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் தயங்கவேண்டாம். என சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் சமந்தபட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.