இலங்கையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் கொரோனா தொற்றின் காரணமாக இதுவரையில் 32 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர். முதலாம் அலை தொடக்கம் இதுவரையில் 4200 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, தற்போது 900 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் குடும்பநல பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் , கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி வழங்கும் வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய இதுவரையில் 75 சதவீதமான கர்ப்பிணிகள் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
எனினும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் துரிதமாக அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். காரணம் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்கள் தீவிர நிலைமையை அடையக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும்.
கொரோனா தொற்றின் காரணமாக இதுவரையில் 32 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர். இது அபாயமான நிலைமையாகும்.
கர்ப்பிணிகள் துரிதமாக தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டால் கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற முடியும்.