தையிட்டி போராட்ட இடத்தில் அவமானப்படுத்தப்பட்ட அங்கஜன் இராமநாதன்!
சட்டவிரோதமாக யாழ்ப்பாணம் வலி வடக்கு- தையிட்டி விகாரையை அகற்ற கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்போருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வழங்கிய நீராகாரம் மற்றும் தின்பண்டங்களை அங்கிருந்த சிலர் வீசி எறிந்ததாக கூறப்படுகின்றது.
பிஸ்கெட்டை தூக்கி வீசிய போராட்டகாரர்கள்
நேற்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு நேரில்சென்று, தனது ஆதரவை தெரிவிதத்துடன், சோடா, பால் பாக்கெட் போன்ற நீராகாரங்களையும் பிஸ்கெட் வகைகளையும் அங்கிருந்தவர்களுக்கு வழங்கினார்.
இந்நிலையில் போராட்ட களத்தில் இருந்து அங்கஜன் வெளியேறியதும், அங்கஜன் கொடுத்த உணவுப்பொருட்கள் வேலி ஓரம் வீசப்பட்டு இருந்தது.
அதேவேளை போராட்ட களத்திற்கு ஆதரவு தெரிவிக்க சென்ற மக்கள் பிரதிநிதிகளை அங்கு நின்ற சிலர் அநாகரிகமாக பேசியும், அநாகரிகமாக அவர்கள் தொடர்பில் குரல் எழுப்பியும் குழப்பங்களை உண்டு பண்ணும் விதமாக செயற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.