முன்னாள் போராளியின் குடிவரவு தொடர்பில் கனடா பாதுகாப்பு அமைச்சர் அலுவலகம் விசாரணை?

Sri Lanka Refugees Immigration Canada Gary Anandasangaree
By Sulokshi Oct 25, 2025 02:30 PM GMT
Sulokshi

Sulokshi

Report

 விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் உறுப்பினராகக் கருதப்படும் ஒருவரின் குடிவரவு விண்ணப்பம் குறித்து கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சரான கேரி ஆனந்தசங்கரியின் தொகுதி அலுவலகம், மீண்டும் மீண்டும் கனடா அரசாங்க அதிகாரிகளிடம் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிமன்ற ஆவணங்கள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் கூறுகின்றன. இந்நிலையில் அமைச்சரின் பேச்சாளர், தமது அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார்.

முன்னாள் போராளியின் குடிவரவு தொடர்பில் கனடா பாதுகாப்பு அமைச்சர் அலுவலகம் விசாரணை? | Anandasangaree Office Repeatedly Ex Ltte Member

கேரி ஆனந்தசங்கரியின் அலுவலகம் கடிதங்கள்

அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி பதவிக்கு வருவதற்கு முன்னர், அவரது தொகுதி அலுவலகம் ரஜினி இராஜமனோகரன் என்பவரின் குடிவரவு வழக்கில், 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில், மூன்று முறை குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை தொடர்பான கனேடிய IRCC) அதிகாரிகளிடம் நிலை குறித்து விசாரித்துள்ளது.

முன்னதாக, ரஜினி இராஜமனோகரன் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு "உறுப்பினர்" என்ற அடிப்படையில் கனடாவுக்குள் நுழைய தகுதியற்றவர் என எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.

எனினும் ரஜினி இராஜமனோகரன், தான் கட்டாயப்படுத்தப்பட்டு முகாமில் சமையல் வேலை பார்த்ததாகவும், காயமடைந்த போராளிகளுக்கு உதவிகள் செய்ததாகவும், தீவிரவாதத்துடன் தனக்கு நேரடித் தொடர்பு இல்லை என்றும் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இருப்பினும், இந்த வழக்கின் சமீபத்திய தீர்ப்பில், கூட்டாட்சி நீதிமன்றம் (Federal Court) குடிவரவு அதிகாரியின் முடிவை உறுதிசெய்து, இராஜமனோகரனின் கனடாவுக்குள் குடியேறும் முயற்சியை நிராகரித்தது. இதன் பின்னரே அமைச்சர் கேரி ஆனந்தசங்கரியுடன் தொடர்புடைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக ஒரு வருடத்திற்கு முன்பு, விடுதலைப் புலிகளின் "உறுப்பினர்" எனக் கருதப்பட்ட செந்தூரன் செல்வக்குமரன் என்பவரின் குடிவரவு விண்ணப்பத்தை அங்கீகரிக்குமாறு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரியின் அலுவலகம் கடிதங்கள் எழுதியதாக தகவல் வெளியாகி இருந்தது.

தற்போது இரண்டாவது முறையாகவும் ரஜினி இராஜமனோகரன் விவகாரத்தில் இத்தகைய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், அமைச்சரின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினி இராஜமனோகரனின் வழக்கில் விடுக்கப்பட்ட கோரிக்கைகள், "விண்ணப்பங்களின் நிலை குறித்து அறியும் வழக்கமான பணிகள்" என்றும், அமைச்சரின் அலுவலகம் எந்தவிதமான ஆதரவு கடிதத்தையும் வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இராஜமனோகரன் அமைச்சரின் தொகுதியைச் சேர்ந்தவர் அல்ல என்றும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, பொதுப் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற பிறகு, கேரி ஆனந்தசங்கரி விடுதலைப் புலிகள் மற்றும் உலகத் தமிழர் இயக்கம் (World Tamil Movement) தொடர்பான முடிவுகளில் இருந்து தன்னைப் பொறுப்பு விலக்கிக் கொண்டதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US