தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை அனகொண்டா மாயம்!
கொழும்பு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி ஒன்று காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
அது தொடர்பில் மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

சட்டவிரோதமாக கொண்டு வந்த பெண்
இந்த மஞ்சள் அனகொண்டா உட்பட மூன்று பாம்பு இனங்களைச் சேர்ந்த ஆறு பாம்புகளை பெண் ஒருவர் செப்டம்பர் 12 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு வந்தார்.
குறித்த பாம்புகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகரிகளால் கைப்பற்றப்பட்டு தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில் மஞ்சள் அனகொண்டா குட்டி காணாமல் போனது தொடர்பில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பிரதி பணிப்பாளர் கசுன் ஹேமந்த சமரசேகர தெரிவிக்கையில்,
ஆறு பாம்புகளும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தல் காலம் முடிவுற்ற பின்னர் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றான மஞ்சள் அனகோண்டா தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது.
அதேவேளை தற்போது காணாமல் போன அனகொண்டா குட்டி இதற்கு முன்னர் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.