இந்திய மணமகனை மணந்த துருக்கி மணப்பெண்; நாடு கடந்த ஓர் சுவாரஸ்ய காதல்!
துருக்கிய பெண் ஒருவரும் இந்திய ஆண் ஒருவரும் காதலித்து திருமணம் செய்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய மணமகன் மது சங்கீர்த் 2016 ஆம் ஆண்டின் போது மணமகள் ஜிஜெமை பணி தொடர்பாக தொடர்ந்த பிராஜெக்ட் ஒன்றில் சந்தித்துள்ளார்.
அதன் பின்னர் இருவர்களும் நல்ல நண்பர்களாக இருந்து வந்ததாக தெரிகிறது. சிறிது காலம் சென்ற பின்னர் மது வேலை சம்மதமாக Gizem வசித்து வந்த துருக்கிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இருவரின் நட்பு காதலாக மாற தொடங்கியுள்ளது. இதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவுகளை எடுத்துள்ளனர். பின்னர் இந்தியாவில் இந்து பாரம்பரியப்படி தெலுங்கு மற்றும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருமணத்தை கோலாகலமாக நடத்தியுள்ளனர்.
மேலும் மணமகள் கணவரின் வீட்டாரோடு சரளமாக பழகுவதற்காக தெலுங்கு மொழியை மிகவும் ஆர்வத்தோடு கற்றுக் கொண்டு வருவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
