ஹோட்டலுக்கு வழிகாட்டாத பொலிஸ் அதிகாரிமீது கண்மூடித்தனமான தாக்குதல்!
ஹோட்டலுக்குச் செல்லும் வழியைக் கூறவில்லை என்பதற்காக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரியை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் சந்தேகத்தின்பேரில் கல்கிஸை தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் பொலிஸ் அதிகாரி
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடமை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி தனது நண்பரைச் சந்தித்து இரவு உணவு உண்டுவிட்டு பஸ்ஸில் ஏற கல்கிஸவுக்கு வந்து கொண்டிருந்தார்.
இதன்போது காரில் வந்த இரு இளைஞர்கள் ஹோட்டல் ஒன்றின் பெயரை கூறி வழிகாட்டுமாறு கேட்டுள்ளனர்.
எனினும் உயர் பொலிஸ் அதிகாரி பதில் கூறாமல் முன்னே சென்று கொண்டிருந்தபோது இரு இளைஞர்களும் காரில் இருந்து இறங்கி அவரைத் தாக்கியதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.