மாற்றுத்திறனாளி மாணவர்களை வன்புணர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது
ஒரு பாடசாலையில் படிக்கும் 10, 12 மற்றும் 13 வயதுடைய மூன்று சிறுவர்களை கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அத்தகைய மற்றொரு குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பாடசாலையின் நிர்வாகக் குழுவின் பொருளாளராக இருந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸ் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் 62 வயதுடைய மாற்றுத்திறனாளி. பாடசாலையில் செவித்திறன் குறைபாடுள்ள மாணவனை அவருடைய தாயார் அழைத்துச் செல்ல வந்தபோது குழந்தையை காணவில்லை, பின்னர் அவர் பாடசாலையில் கிணற்று இருக்கும் பக்கத்தில் இருந்து ஓடிவந்துள்ளார். அதுதொடர்பில் மகனிடம் தாயார் வினவியுள்ளார்.
அதன்பின்னர், அந்த தாயார் அளித்த புகாரில் சந்தேக நபர் பல கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள இந்தக் குழந்தைகளிடமிருந்து வாக்குமூலங்களை எடுக்கும்போது, சைகை மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகவும், பாடசாலையின் நிர்வாகக் குழுவின் பொருளாளராகச் செயல்படும் நபர் இந்த மைனர் சிறுவர்கள் மீது பல சந்தர்ப்பங்களில் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் அடிக்கடி பாடசாலைக்கு வருவார், இருட்டிய பிறகு திரும்புவார், கூடுதலாக, அவர் தங்குமிடங்களுக்கு வந்து, கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு விளக்குகளை அணைப்பார் என்று வாக்குமூலங்கள் மேலும் கூறுகின்றன.