புலம்பெயர் தேசத்தில் வாழும் ஈழ தமிழ் குடும்பம் ஒன்றின் நெகிழவைக்கும் செயல்!
முல்லைத்தீவு மாவட்டம் கற்சிலைமடு பண்டாரவன்னியன் மகாவித்தியாலயம் முன்பாக புதிய பேருந்து நிலையம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கற்சிலைமடு பிரதேசத்தை சேர்ந்த பரமநாதன் சீவரத்தினம் என்பவரின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு இன்று அவரது உறவினர்கள் குறித்த பேருந்து நிலையத்தை அமைத்துக்கொடுத்துள்ளனர்.
அப் பகுதி பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி இந்த பஸ் தரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக அதனை நிர்மாணித்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தாயகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள பல பிரதேசங்கள் காணப்படுகின்றன.
இந்நிலையில் குறித்த குடுபத்தினரின் முன்னுதாரணமான செயல்பாட்டினை சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளதுடன் இதுபோன்ற செயல்பாடுகளை செய்வது எமது வருகால சந்ததியினருக்கு பெரிதும் உதவியாகவிருக்குமெனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

