இலங்கையில் 21 வயதான இளைஞனுக்கு நேர்ந்த துயரச் சம்பவம்!
அம்பாறை மாவட்டம் - திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள குடிநிலப்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுபாட்டை மீறி வீதியை விட்டு விலகி மோதிய விபத்தில் 21 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று முன்தினம் (16-09-2023) மாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குறித்த விபத்தில் குடிநிலத்தைச் சேர்ந்த 21 வயதுடைய தர்மராஜா நிதர்சன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த இளைஞன் சம்பவதினமான நேற்று முன்தினம் மாலை குடிநிலத்தில் இருந்து சாகாமம் பிரதேசத்திற்கு மோட்டர் சைக்கிளில் பயணித்த போது அந்த பகுதியில் கடும் காற்று வீசிய நிலையில் வேகமாக சென்ற மோட்டர் சைக்கிளை காற்று தள்ளிய போது வீதியை விட்டுவிலகி கல்பாறையுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.