இலங்கையின் கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணி இவ்வளவுதான்; வெளியான தகவல்
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பாக 1009.5 மில்லியன் டொலர்கள் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் குறித்த விடயத்தை தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
அந்நிய செலாவணி கையிருப்பில் 67 மில்லியன் டொலர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் கையிருப்பு ஆகும்.
இந்நிலையில், உத்தியோகபூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் சொத்துக்களின் தொகை கடந்த நவம்பர் மாதம் அளவில் ஆயிரத்து 587 மில்லியன் டொலர்களாக இருந்தது அதில் தங்கத்தின் கையிருப்பு 382.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தனது இந்திய விஜயத்தின் போது, எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான இணக்கத்தையும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்தை கொள்வனவு செய்வதற்கான நிதி வசதிகளையும் ஏற்பாடு செய்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.