நாட்டில் பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி!
பெரிய வெங்காயத்தின் விலையில் இன்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான அதிகபட்ச விலை 160 ரூபாவாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று தீடீரென வீழ்ச்சி அடைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனிடையே கொழும்பு மெனிங் சந்தையில், இன்று ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 150 ரூபாய் முதல் 155 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புறக்கோட்டை 4ஆம் குறுக்குத் தெருவில், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை இன்று காலையில் 150 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. எ
னினும் இன்று மாலையில் 145 ரூபாய் தொடக்கம் 140 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டதாகப் புறக்கோட்டை 4ஆம் குறுக்குத் தெரு தரவுகள் தெரிவிக்கின்றன.