தென்சீனா கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலுக்கு நேர்ந்த கதி!
தென்சீனா கடற்பரப்பில் இனந்தெரியாத பொருள் ஒன்றுடன் அமெரிக்க நீர்மூழ்கி மோதியதால் நீர்மூழ்கியிலிருந்த பல கடற்படையினர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுஎஸ்எஸ் கொனெக்டிகட் என்ற அமெரிக்காவின் அணுவாயுத நீர்மூழ்கி இனந்தெரியாத பொருள் ஒன்றுடன் மோதியதில் 15 கடற்படையினர் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீர்மூழ்கி எதனுடன் மோதியது என்பது தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குவாமைநோக்கி சென்றுகொண்டிருந்த நீர்மூழ்கியே இவ்வாறு இனந்தெரியாத பொருள் ஒன்றுடன் மோதுண்டுள்ளது.
எனினும் நீர்மூழ்கியின் செயற்பாடுகளிற்கு பாதிப்பில்லை என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். உலகின் மிகவும் கொந்தளிப்பான பகுதிகளில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நீர்மூழ்கியே விபத்தினை சந்தித்துள்ளது.
