ரஷ்யாவிற்கு அடுத்தடுத்து வரும் பேரிடியான செய்தி! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை
உக்ரைனில் உள்ள குழந்தைகள் வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதல் எதிரொலியாக, ரஷ்யா மீது மேலும் தடைகள் விதிக்க நேரிடும் என அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் (Janet Yellen) தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள குழந்தைகள் வைத்தியசாலையின் மீது நேற்றைய தினம் (09-03-2022) ரஷ்ய துருப்புகள் தாக்குதல் நடத்தி உள்ளன. இந்த தாக்குதலில் 17 பேர் காயம் அடைந்தனர். இதில் வைத்தியசாலை மற்றும் பிரசவ வார்டு உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்தன.
ரஷ்யாவின் இந்த கொடூர தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, (Volodymyr Zelenskyy) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் வைத்தியசாலையின் இடிபாடுகளுக்குள் மக்கள், குழந்தைகள் உள்ளனர். இது மிகவும் மோசமான செயல் என்று கூறினார். வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமானது என்று ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் (António Guterres) கருத்து கூறியிருந்தார்.
#UPDATE Amid signs Russia has ramped up attacks on Ukrainian civilians, the United States and its European allies could impose additional penalties on Moscow, US Treasury Secretary Janet Yellen says pic.twitter.com/cKvVoKItqy
— AFP News Agency (@AFP) March 10, 2022
இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க கூடுமென அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜேனட் யெலன் கூறுகையில்,
உக்ரைன் குடிமக்களுக்கு எதிராக ரஷ்யா செய்யும் அட்டூழியங்கள் தீவிரமடைந்து வருவதாகத் தெரிகிறது, எனவே அவர்கள் மீது கூடுதல் தடைகளைக் கருத்தில் கொள்ள எங்கள் நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவது பொருத்தமானது” என்று யெலன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இன்றுவரை விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவின் பொருளாதாரத்தை "பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன" என்று கூறினார்.