பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை திருத்தியமையுங்கள்! Julie Chung
பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை திருத்தியமைக்குமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை அமுல்படுத்துகையில், தொழில்நுட்ப, சிவில் தரப்பினர் மற்றும் நிபுணர்களின் கருத்துகளை உள்ளடக்குவது மிகவும் முக்கியமானதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது டிவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
மக்களின் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது எனவும், இந்த சட்டமூலத்தின் மூலம் அந்த உரிமை மீறப்படக் கூடாதெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச தரத்திற்கும் ஏனைய ஜனநாயக நாடுகளில் மிகவும் சிறப்பாக பேணப்படும் சட்டத்திட்டங்களுக்கும் அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை திருத்தியமைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.