மின்னல் தாக்கம் தொடர்பில் ‘அம்பர்’ எச்சரிக்கை
வடமேல், மத்திய, சபரகமுவ, ஊவா, மேல், தென் மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்திற்கு வளிமண்டலவியல் திணைக்களம் கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பான ‘அம்பர்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (05) காலை 11 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (06) அதிகாலை 1 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த பகுதிகளின் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.