அம்பலாங்கொடை துப்பாகிச்சூடு; மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு
அம்பலாங்கொடையில் இன்று (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு துப்பாக்கிதாரியால் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலாங்கொடையில் இன்றைய தினம் காலை கடை ஒன்றின் முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடை ஒன்றின் முகாமையாளர் சுட்டு கொலை
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இரண்டு குழுக்களுக்கிடையிலான தகராறினால் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அம்பலாங்கொடை குருந்துவத்த - அந்ததோல வீதியில் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.