வெள்ளை வெங்காயம் தரும் அற்புத மருத்துவ பயன்கள்!
பொதுவாக வெங்காயம் உணவில் அவசியமாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் ஆகும். வெங்காய வகைகளில் மிகவும் அபூர்வமானதும், மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் வெள்ளை வெங்காயம் உள்ளது.
இந்த வெள்ளை வெங்காயம் அரிதாக கிடைப்பதாகவும், மருத்துவ குணம் மிக்கதாகவும் உள்ளது. அதுமட்டுமல்லாது வெள்லை வெங்காயம் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
வெள்ளை வெங்காயத்தின் நன்மைகள்
வெள்ளை வெங்காயம் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுகிறது.
வெள்ளை வெங்காயத்தில் உள்ள ஃப்ளவனாய்டு ஆண்டி ஆக்சிடெண்டுகள் புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படுகிறது.
வெள்ளை வெங்காயம் உணவில் சேர்ப்பதால் செரிமான பிரச்சினைகள் குறையும்.
வெள்ளை வெங்காயத்தில் உள்ள புரதங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன.
இதில் உள்ள ப்ரீபயாடிக்குகள் வயிற்றில் புழுக்கள் உருவாவதை தடுக்கிறது.