அவகோடா பழத்தோலில் இத்தனை நன்மைகள் இருக்கா ; இதையும் தெரிஞ்சுக்கோங்க....
அவகேடோ பழத்தில் அதிகளவான சத்துக்கள் உள்ளடங்கியுள்ளதைப் போல அதன் விதையிலும் பல்வேறு சத்துக்கள் உள்ளன. அவகாடோ தோலில் ஆன்டிஅக்ஸிடன்ட்கள், ஃபிளேவனாய்ட்கள், ஃபீனால்கள் ஆகியன உள்ளன.
அதன் தோலின் நிறம் அதிகம் கறுப்பாக இருக்கும்போது ஊட்டசத்தின் அளவும் அதிகம் இருக்கும். அவகாடோவின் தோலுடன் இலவங்கப்பட்டை, இஞ்சி அல்லது லெமன் கிராஸ் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்தால் அவகேடோ தோல் தேநீர் தயாராகும்.

ஆரோக்கிய நன்மைகள்
இது முதுமை மற்றும் நீண்ட நாள் நோய்களை தடுக்க உதவும்.
தோலை உலர்த்தி, பொடியாக அரைத்து கொஞ்சமாக தோசை மா அல்லது ரொட்டி சப்பாத்தி மா கலவையில் சேர்க்கவும். இது நார்ச்சத்தை வழங்கும்.
மேலும் இதை வறுத்து, எண்ணெய் அல்லது கஷாயம் செய்ய பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை சயைமலில் சேர்த்து செலட், சூப்பில் சேர்த்தால் நல்ல மணம் மற்றும் சுவை கிடைக்கும்.
சுத்தமான தோலை சிறிய அளவில் ஸ்மூத்தி கலவையில் சேர்க்கலாம். இதில் நார்ச்சத்து மற்றும் அன்டிஅக்ஸிடன்மடகளை அதிகரிக்கும்.
அவகேடோ தோலை நன்றாக கழுவி, வெங்காயம், பூண்டு மற்றும் பிற காய்கறி தோல்களுடன் சேர்த்து கொதிக்க வைத்தால் லேசான சுவையுள்ள சிரப் கிடைக்கும்.
அவகேடோ தோலை நன்றாக கழுவி, சிறு துண்டுகளாக வெட்டி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். அவகேடோ தோலை நன்றாக கழுவி, சிறு துண்டுகளாக வெட்டி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.