இலங்கையில் அரசாங்க அதிகாரிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு!
நாட்டில் தரவு சேகரிப்பு மற்றும் விண்ணப்ப செயலாக்கத்திற்கு தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் பொது அதிகாரிகளுக்கு ஒரு விண்ணப்பத்திற்கு 150 ரூபாய் வீதம் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மில்லியன் கணக்கான ரூபாய் செலவாகும் இந்த திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி மற்றும் பொதுமக்களிடமிருந்து தரவு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள ஏனைய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் இது பொருந்தும்.
சமுர்த்தி பெறுனர்களின் தரவுகளை சேகரிப்பதற்கு மாத்திரம் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தினால், 600 மில்லியன் ரூபாய்களுக்கு அதிகமான தொகை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 103 தரங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த உதவித்தொகைக்கு உரித்துடையவர்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.